திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 67.39 அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் 68.08 அடியாக உயர்ந்தது.
72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் 69.68 அடியாக உள்ளது. நீர்வரத்து 750 கன அடியாகவும், வெளியேற்றம் 907 கன அடியாகவும் உள்ளது. பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், நேற்று அணையின் நீர்மட்டம் 43.37 அடியாக உயர்ந்துள்ளது.