தமிழக செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது.

மேட்டூர்,

மேட்டுர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணியின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது. அணைக்கு தற்போது 7,641 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டுர் அணையில் 71.70 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.