தமிழக செய்திகள்

மஞ்சளாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தேனி,

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து திண்டுக்கல், தேனி மாவட்ட பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுப்படிக்காக மஞ்சளாறு அணையில் இருந்து திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கையை ஏற்று இன்று முதல் 135 நாட்களுக்கு முதல்போக சாகுப்படிக்காக தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் இன்று மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு