சென்னை,
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால், சென்னையை அடுத்த மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர், கொசஸ்தலை ஆறு வழியாக மணலி புதுநகர் மற்றும் சடயங்குப்பம், பர்மா நகர் பகுதிகளுக்குள் புகுந்தது.
இந்த நிலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளதால், சடயங்குப்பம் பகுதியை சுற்றிலும் வெள்ளநீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து மேலும் நீரின் அளவு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுவதால், தீயணைப்புத்துறையினர் மீட்புப் படகுகளோடு தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து மீட்புப் படையினர் அந்த பகுதிகளில் பாதுக்கப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.