கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அமராவதி அணையில் இருந்து 24-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்ட பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்துக்குட்பட்ட ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்காரை கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 பழைய ராஜ வாய்க்காலங்கள் உள்ளன.

இந்த பாசனப்பகுதிகளுக்கு, வருகிற 24-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 6-ந்தேதி வரை 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், முதல் போக பாசத்துக்காக அமராவதி அணையில் இருந்து 2 ஆயிரத்து 74 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து