தமிழக செய்திகள்

பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக மாறியுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனிடையே, அடுத்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரியில் இருந்து நீர் திறப்பு 200 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு