தமிழக செய்திகள்

விருதுநகர் சாஸ்தாகோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு

மொத்தம் 48 நாட்கள் தண்ணீர் திறந்து விடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர்,

தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 7 நாட்களுக்கு (17.11.2025 முதல் 23.11.2025 வரை) விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடவும், மீதம் நீர் இருக்கும் வரை 41 நாட்களுக்கு (24.11.2025 முதல் 03.01.2026 வரை) நீர்வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் வழங்கவும், மொத்தம் 48 நாட்கள் தண்ணீர் திறந்து விடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளைய வட்டத்தில் உள்ள வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம், சேத்தூர், முத்துசாமிபுரம், நல்லமங்கலம், செட்டியார்பட்டி, கோவிலூரில் உள்ள 3130.68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்