தமிழக செய்திகள்

பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.11 அடியாக உள்ளது.

தினத்தந்தி

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்ட பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.11 அடியாக உள்ளது. அணையின் நீர்வத்து 406 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2,350 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் 24.3 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை