தமிழக செய்திகள்

வீராணம் ஏரியில் இருந்து குடிநீருக்காக அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தம்

வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தினத்தந்தி

கடலூர்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடைவழியாக வரும்.

இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கனஅடியாகும். மேட்டுர் அணை திறக்கப்பட்டு, அதன்மூலம் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தபோது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. சென்னைக்கு தினந்தோறும் 76 கனஅடி நீர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படும் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்