தமிழக செய்திகள்

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அதிராம்பட்டினம் நகராட்சியில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தினத்தந்தி

அதிராம்பட்டினம் நகராட்சியில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வரி செலுத்த அறிவுறுத்தல்

அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, ஆகிய வரிகளை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பலர் வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகராட்சியில் சொத்துவரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வருகின்றனர்.

ஆணையர் உத்தரவு

நகராட்சிக்கு சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பாக்கி நிலுவை உள்ளதால் இதனை சீரமைக்கும் வகையில், நகராட்சி ஆணையர் சித்ர சோனியா உத்தரவின் பேரில், நகராட்சி ஊழியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று பலருடைய வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்கள் விரைவாக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு