சேலம்,
கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமுடன் நிரம்பி வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.08 அடியாக உள்ளது. இதேபோன்று நீர் இருப்பு 92.01 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியில் இருந்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று அணையில் இருந்து நீர் திறப்பு 50 ஆயிரம் கனஅடியில் இருந்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால், தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடியை எட்டியிருந்தது. இன்று அது 119.08 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் இன்று மீண்டும் அணை நிரம்ப கூடிய சூழ்நிலை உள்ளது.