தமிழக செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் - அமைச்சர் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில்,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலை புகுத்த கவர்னர் முயற்சிக்கிறார் என சந்தேகம் எழுந்துள்ளது.

பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை; அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே கவர்னரின் கடமை.

கவர்னரின் செயல்பாடுகள் பாஜகவின் பிரசாரமாக உள்ளது. இந்திய நாட்டின் வரலாற்றை முதலில் கவர்னர் படிக்க வேண்டும். கவர்னர் எந்த '-ism' பின்பற்றுவேராக இருந்தாலும் 'Humanism' என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்