தமிழக செய்திகள்

“நாங்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சி அல்ல” - கே.எஸ் அழகிரி

நாங்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சி அல்ல என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாங்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சி அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், அதிமுக - பாஜகவைப் போல, திமுக - காங்கிரஸ் அடிமை கூட்டணி அல்ல, சுதந்திரக் கூட்டணி. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஜனநாயக ரீதியான கூட்டணி என்பதால் சுதந்திரமாக கருத்துகளை சொல்கிறோம் என்று கூறினார்.

மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தானே தவிர ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் அல்ல என்றும், 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும், ஆளுநர் அல்ல என்றும் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது