தமிழக செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்; அமைச்சர் உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் கூறியதாவது:-

நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது தென் கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. அந்த புயல் 14-ம் தேதி இரவு வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும்.

இதன் காரணமாக வட தமிழக கடலோரம், புதுச்சேரி, ஆந்திர கடலோர பகுதிகளின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.

தென் தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் பருவமழையை எதிர்கொள்வது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், நிவாரண முகாம்கள், மீட்புகுழுக்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறோம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு உள்ளது என்று கூறியுள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு