தமிழக செய்திகள்

என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள் - கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள் என்று கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை,

சட்டமன்ற தேர்தல் தற்போது நெருங்கி வருவதால், தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்களது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இராணிப்பேட்டை, அனந்தலை ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியபோது, அதிமுகவில் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அக்கட்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். ஆனால், அதிமுக கூட்டணி கட்சிகளில் சிலர் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என்றும் ஜேபி நட்டா தான் அறிவிப்பார் எனவும் ஒருபக்கம் கூறப்பட்டு வருகிறது. இங்க ஓபிஎஸ் எப்பொழுது பிரிந்து செல்வார் என்று தெரியாது. ஆனால் சென்றுவிடுவார். இதுபோன்று சூழல் தற்போது அதிமுகவில் நிலவி வருகிறது. அடுத்து திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று தமிழக மக்கள் உறுதியுடன் நம்புகின்றனர். அதற்கு மக்கள் கிராம சபை கூட்டங்களே சாட்சி. அதிமுகவின் சாதனை பட்டியல்கள் எல்லாம் பொய், கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல்களில் முதலிடத்தில் உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து அதிமுக அரசு பொய்யான விளம்பரம் செய்து வருகிறது. விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் கூடுவதை பார்த்து அஞ்சி தடை போடுகிறது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் மோசமான நிலையில் உள்ளன. பெண்ணாக இருந்தாலும் தைரியமானவர் என்பதால் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினேன். தேர்தலுக்காகவே ரூ.2,500 பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்குகிறது. கொரோனா பேரிடர் நிவாரணமாக தலா ரூ.5000 வழங்க வேண்டும். பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் தான் வழங்க வேண்டும். திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தை பார்த்து ஆடிப்போயுள்ளனர். அவர்கள் என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள் என்று அவர் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை