தமிழக செய்திகள்

தி.மு.க-விடம் ஒரு தொகுதி கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா பேட்டி

எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதில் போட்டியிட தயாராக இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. - மனிதநேய மக்கள் கட்சி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"2013-ம் ஆண்டு முதல் கூட்டணியில் பணியாற்றி வருகிறோம். வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதில் போட்டியிட தயாராக உள்ளோம்.

இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்." இவ்வாறு அவர் கூறினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்