சென்னை,
திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தேர்தலுக்கு 4 மாதம் உள்ள நிலையில் திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நெருக்கடி கொடுக்கிறது. திமுகவை ஒன்றும் செய்ய முடியாமல் பொய் வழக்குகளை போடுகிறது மத்திய அரசு. அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையத்தை ஆகிய மூன்றையும் கையில் வைத்துக்கொண்டு மத்திய அரசு எதையாவது செய்யலாம் என முயற்சி செய்கிறார்கள்.
இது போல பல சோதனைகளை சந்தித்து வெற்றி கண்ட இயக்கம் திமுக. இது போல் அமலாக்கத்துறை, சிபிஐ எந்த விசாரணை நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் மடியில் கனமில்லை ஆகவே நாங்கள் யாருக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
எடப்பாடி பழனிசாமி சம்பந்தி வீட்டில் அமலாக்கத்துறை செய்டு நடந்த போது முகத்தை மூடிக்கொண்டு டெல்லி சென்றவர் எடப்பாடி பழனிசாமி. எங்களை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை. நாங்கள் மத்திய அரசை துணிச்சலாக எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.