சென்னை,
கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்போது வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் பேசியதாவது;-
"சொந்த சாதி, மத நலனை விரும்புபவர்களால் தேச நலனுக்கு ஆபத்து என அம்பேத்கர் பேசியதை நினைவு கூறுகிறேன். இந்திய அளவில் மிகப்பெரிய ஆளுமையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.
9 கோடி மக்களின் உரிமைக்கு எதிராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு என்ற பெயரை தக்கவைத்துக் கொள்ளவே போராட வேண்டியுள்ளது. கவர்னரின் நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்டுள்ள சவால்.
அரசியலமைப்பு சாசனம் வேந்தர் என்ற பொறுப்பினை கவர்னருக்கு வழங்கவில்லை. வேந்தராக கவர்னர் இருக்கக் கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்."
இவ்வாறு சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.