சென்னை,
சென்னை தரமணியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தில் இருக்கப் போகிறது என்றார். மேலும் அரசை விட நாடு மிகப்பெரியது என்று குறிப்பிட்ட அவர், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளது என்று கூறினார்.