தமிழக செய்திகள்

பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்

தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

"கோவையில் தனியார் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம்.

இதற்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வகுப்பதுடன், அந்தந்த பள்ளி நிர்வாகங்களும் மாணவச்செல்வங்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அத்துமீறல்களைத் தடுப்பதில் முழு அக்கறை காட்டவேண்டும்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை