தமிழக செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை எந்நாளும் போற்றி கொண்டாடுவோம் - டிடிவி தினகரன்

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்ததினம் இன்று.

தினத்தந்தி

சென்னை,

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கட்டபொம்மனை போற்றியும், அவரது வீர தீர செயல்களை நினைவு கூர்ந்தும் வருகின்றனர்.

அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஆங்கிலேயர்களுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அச்சாணியாக திகழ்ந்த பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்ததினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து துணிச்சலுடன் எதிர்த்து போராடியதோடு, தன்னை தூக்கிலிட்ட போதிலும் மாவீரனாக மடிந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை எந்நாளும் போற்றி கொண்டாடுவோம்." என்று அதில் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்