தமிழக செய்திகள்

தி.மு.க கூட்டணியில் 5 தொகுதியை கேட்டு பெறுவோம் - கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி

தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுமொத்த இஸ்லாமியர்களும் வாக்களித்து மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை அமர்த்துவோம் என பேராசியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில செயற்குழு கூட்டம் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைப்பெற்றது. பின்னர்தேசிய தலைவர் பேராசியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களை

சந்தித்தார் அவர் கூறியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடந்தது இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக உள்ள 52 மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் 10சார்பு அணிகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

செயற்குழுவில் முக்கியமாக எதிர்வரும் சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் வெற்றிக்கு எப்படி யொல்லாம் பாடுபடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 11- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய தீர்மானமாக தமிழகத்தில் திராவிட மாடல் ஆட் சியை சிறப்பாக நடத்தி செல்லும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் மகஹாலா ஜமாத்துக்கள் உள்ளன அவர்கள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி நல்ல முறையில் உள்ளது அது தொடர வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.

அதன்படி2026 சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆண், பெண்கள் அனைவரும் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் ஒட்டுமொத்தமாக

வாக்குகள் அளிப்பார்கள். கடந்த சட்டமன்றதேர்தலில் மூன்று தொகுதி கொடுத்தார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை வழங்கினார்கள். நல்ல ஒத்துழைப்புடன் கே. நவாஸ்கனி வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் 40 லட்சம் முஸ்லிம் வாக்குகள் உள்ளது அந்த அடிப்படையில் 2011-ல் முஸ்லிம்களுக்கு 16 தொகுதியை வழங்குங்கள் என்று கூறினோம். அதன்படி வழங்கினார். அதில் முஸ்லிம் லீக்குக்கு 5 தொகுதிகளை வழங்கினார்.

அதே போன்று இந்த தேர்தலிலும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தில் கூறுவோம். அதில் முஸ்லிம் சமுதாயஒரு பெண் க்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 22-ம் தேதி பேச்சுவார்த்தை கமிட்டி அறிவிக்கப்படும் என்று தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

அந்த கமிட்டியில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்று பார்ப்போம். எங்களை அழைத்தவுடன் சென்று பேசுவோம்.

தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா காலம் முதல் கலைஞர், மு.க.ஸ்டாலின்,இன்று வரை திராவிட மாடல் தி.மு.கஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிகாரத்தில் பங்கு என்பது எங்களாது கோரிக்கை அல்ல

தி.மு.க ஆட்சியில் அனைத்திலும் எங்களுக்கு பங்கு கொடுக்கிறது.

பங்கு கொடுக்காமல் எங்களை ஒதுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் ஆட்சியில் பங்கு என்று கூறுகிறார்கள். இதை தேசிய தலைமை ஏற்றுக் கொண்டாத என்று தெரியவில்லை,

தேசிய தலைமை செல்லுவதைதான் தமிழ்நாடு தலைமை பின்பற்றும்,மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டிற்கு தலைமை தாங்குகிறார். மு.க.ஸ்டாலின். இந்தியாவில் பல்வேறு கட்சிகள் அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. பல்வேறு கருத்துக்கள். கூறுவார்கள் கருத்து பறிமாற்றம் தான். எந்த சல,சலப்பும் இல்லை.

விஜய் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. தேர்தல் நின்ற பிறகு பார்க்கலாம். மக்கள்தான் ஏஜமானவார்கள். சிறுபான்மை வாக்குகள் என்பது முஸ்லிம் வாக்குகள் மட்டுமல்ல, கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஜெயின் போன்றவர்களும்உள்ளனர்.

தமிழகம் முழுவதும் நாங்கள் போட்டியிடும். 20 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளோம். அதில் 5 தொகுதி கேட்போம். எங்கள் கட்சியின் சின்னம் ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுவாம்.

இவ்வாறு அவர் கூறினார்