சென்னை,
ராணி எலிசபெத் மறைவை தெடர்ந்து, தமிழக அரசு சார்பில் லண்டனில் பென்னிகுவிக் சிலை திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து லண்டனில் இருந்து அமைச்சர் ஐ.பெரியாமி, திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டேர் சென்னை திரும்பினர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில்,
பென்னிகுவிக் சிலை மக்கள் பார்த்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விழா நடைபெற்றால், ஒ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படும். லண்டனில் விழா என்பதால் திமுக எம்எல்ஏக்கள் 5 பேர் சொந்த செலவில் தான் வந்தார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.