தமிழக செய்திகள்

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் - டிடிவி தினகரன்

அனைத்து நிலை மக்களும் தெருவிற்கு வந்து போராடும் நிலை உருவாகி உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது;-

மதுரை என்றாலே வீரத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் பெற்ற பூமி. மதுரை சித்திரைத் திருவிழா போன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இருண்ட ஆட்சியை, ஊழல் ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த பொதுக்கூட்டம்.

அனைத்து நிலை மக்களும் தெருவிற்கு வந்து போராடும் நிலை உருவாகி உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி நடக்கிறது. ஊழலை தவிர வேறு எதுவும் இல்லாத ஆட்சியை வீழ்த்த பிரதமருக்கு உறுதுணையாக இருப்போம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.