தமிழக செய்திகள்

சுகாதாரத் துறையை பொதுப் பட்டியலுக்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையை பொது பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்துரு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது; கண்டிப்பாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

சென்னை,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் என்ற பொருளை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் சுகாதாரத்துறைக்கான துணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து இன்று பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொது பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்துரு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.கண்டிப்பாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என கூறி உள்ளார்.

பொது சுகாதாரத் துறையை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது. அதை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனா ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அதுபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பொது சுகாதாரத்தை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவது, கூட்டாட்சி முறைக்குக் குழிபறித்துவிடும் என கூறி உள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி