தமிழக செய்திகள்

பிரேக் இன் சர்வீஸ் சட்டத்தை பயன்படுத்தினால் சட்டப்படி எதிர்கொள்வோம் - போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் பேட்டி

பிரேக் இன் சர்வீஸ் சட்டத்தை பயன்படுத்தினால் சட்டப்படி எதிர்கொள்வோம் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காலம் சார்ந்த ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் 6 வது நாளாக நடைபெற்று வருகிறது.

கடந்த 25ம் தேதி துவங்கிய போராட்டமானது 6-வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து 5 நாட்கள் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக்கிங் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

முன்னதாக மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பயிற்சிக்கு திரும்பத் தவறினால் நன்னடத்தை சான்று கிடையாது. நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் போராடும் பேராசிரியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சென்னையில் பேராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

6-வது நாளாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளேம். பிரேக் இன் சர்வீஸ் சட்டத்தை பயன்படுத்தினால் சட்டப்படி எதிர்கெள்வேம்.

18 ஆயிரம் மருத்துவர்கள் பேராட்டத்தில் தெடர்ந்து ஈடுபட்டு வருகிறேம். வேலை நிறுத்தத்தை தெடருவது எங்கள் நேக்கம் அல்ல, நாங்கள் ஏற்கனவே கூறியது பேல, முதலமைச்சர் தலையிட வேண்டும்.

சாகும் வரை உண்ணாவிரத பேராட்டத்தை தெடருவேம். 90% மருத்துவர்கள் வேலைக்கு வந்தால் 12 ஆயிரம் பேருக்கு நேட்டீஸ் ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.