தமிழக செய்திகள்

அங்காளம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணிவிப்பு

உளுந்தூர்பேட்டையில் அங்காளம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணிவிப்பு

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் அமைச்சார் அம்மன் வீதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டு அம்மனுக்கு சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு 1 லட்சம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாதமாக வளையல்கள், மஞ்சள் கயிறு மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்