தமிழக செய்திகள்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு; பன்வாரிலால் புரோகித், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தினத்தந்தி

திருமண வரவேற்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் - சவுமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும், சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த பூ.தனசேகரன் - கலைவாணி தம்பதியினரின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் சென்னையில் கடந்த 1-ந்தேதி திருமணம் நடைபெற்றது.சங்கமித்ரா-ஷங்கர் பாலாஜி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

பன்வாரிலால் புரோகித்- மு.க.ஸ்டாலின்

விழாவில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, தி.மு.க. எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதி மாறன், கதிர் ஆனந்த், டாக்டர் கலாநிதி வீராசாமி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கமல்ஹாசன்-வடிவேல்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர்கள் வடிவேல், சந்தானம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்