தமிழக செய்திகள்

வாரவிடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

வாரவிடுமுறை நாளான இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தினத்தந்தி

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், பியர்சோழா ஆகிய அருவிகளை கண்டு ரசித்து அருகில் நிற்பதுபேல் செல்பி எடுத்துக் கொண்டனர்.

வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது. குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனூர், சுழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் இதமான சீதேசனம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

வாரவிடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை சீசன் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் குறைவாக காணப்படும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு