கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

எர்ணாகுளம் ஜங்ஷன்- வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

எர்ணாகுளம் ஜங்ஷன்- வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, எர்ணாகுளத்தில் இருந்து வரும் 18-ந்தேதி (புதன்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 16363) மறுநாள் மாலை 5.35 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து 19-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (16364) மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைகிறது.

இவ்வாறு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்தும், வியாழக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்தும் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read:காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை