6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் கைது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை,

நெல்லை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் கடலூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியுடன் பழகி வந்தார். பின்னர் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு நெல்லை டவுன் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

Also Read
காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
கோப்புப்படம்

இந்த நிலையில் முதல் கணவர் மூலம் பிறந்த 6 வயது சிறுமிக்கு தொழிலாளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அந்த இளம்பெண் நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

Also Read
உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம் - தமிழக அரசு உத்தரவு
கோப்புப்படம்

விசாரணைக்கு பின்னர் தொழிலாளி மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

Also Read
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com