தமிழக செய்திகள்

சென்னை-நெல்லை இடையிலான வாராந்திர வந்தே பாரத் ரெயில் சேவை, நாகர்கோவில் வரை நீட்டிப்பு

சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

சென்னை,

சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த ரெயில் சேவையானது நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்