தமிழக செய்திகள்

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்; வேலூர், திருச்சியில் 105 டிகிரி கொளுத்தியது.

தினத்தந்தி

சென்னை,

அக்னி நட்சத்திரம் இன்று (புதன்கிழமை) தொடங்கும் நிலையில், அதற்கு முன்பாகவே கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் வெயில் சதம் கண்டு வருகிறது. அந்த வகையில், நேற்றும் வெயில் கடும் வெப்பத்தை உமிழ்ந்தது. தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

அதிகபட்சமாக வேலூர், திருச்சியில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. இதற்கு அடுத்தப்படியாக திருத்தணி, மதுரை விமான நிலையத்தில் தலா 104 டிகிரி, ஈரோடு, கரூர் மற்றும் மதுரை நகரம், தஞ்சையில் தலா 102 டிகிரி, சேலத்தில் 101 டிகிரி மற்றும் பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. இதேபோன்று, பிற முக்கிய இடங்களிலும் 96 முதல் 98 டிகிரி வெயில் சராசரியாக பதிவாகி இருக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்