தமிழக செய்திகள்

வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

ஆத்தூர்:-

ஆத்தூரில் வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய் கொண்டார்.

வெல்டிங் தொழிலாளி

ஆத்தூர் உடையார்பாளையம் 9-வது வார்டு சடகோபன் தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் பிரபு (வயது 33). லேத் பட்டறையில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் பிரபு சிலரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பிரபு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொல செய்து கொண்டார்.

விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது