தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்-அமைச்சர் இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் விதம், 38,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மேலும் கலைஞர் நினைவிடத்தில் பணியாற்றி வரும் 38 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய பையையும், ஊக்கத்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்