தமிழக செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்தினர் கருணை தொகை பெற என்னென்ன விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்?

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்தினர் கருணை தொகை பெற என்னென்ன விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்? நகராட்சி நிர்வாக இயக்குனரகம் அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொரோனா தடுப்பு பணியின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கு கருணை தொகையாக ரூ.25 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதற்கு ஏதுவாக கீழ்கண்ட நிபந்தனைகள், விவரங்கள் உறுதி செய்வதுடன், அந்த விவரங்களை உடனே அரசுக்கு அனுப்ப வேண்டும்.

அதன் விவரம் வருமாறு:-

* கொரோனா நோய்தொற்று தடுப்பு பணியில் பணிபுரிய செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதன் நகல்.

* கொரோனா நோய் தடுப்பு பணியில் பணிபுரிந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதற்கான துறை தலைவர், அலுவலக தலைவரின் சான்று.

* கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான மருத்துவச்சான்று (இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்பட வேண்டும்).

* கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளராக பணிபுரிந்தாரா என்பதற்கான சான்று.

* கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டார் அல்லது முன்கள பணியாளராக பணிபுரிந்தார் என சான்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளதா? என்பதையும், கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியின்போது கொரோனா தொற்று ஏற்பட்டதா? என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

* இறப்பு சான்று நகல்.

* வாரிசுதாரர் சான்றிதழ் நகல்.

* சான்றொப்பமிட்ட அசல் படிவங்கள்.

* நிரந்தர பணியாளர் என்றால் பணியில் சேர்ந்த நாள் மற்றும் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாள், பணி நிரந்தரம் செய்யப்பட்ட விவரம், தற்காலிக பணியாளர் என்றால் பணியில் சேர்ந்த நாள் மற்றும் அதன் விவரம்.

* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கடிதத்தில் தெரிவித்துள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்துள்ளாரா? என்ற விவரம்.

* துறை தலைவர், அலுவலக தலைவரின் ஒப்புதல்.

மேற்கண்ட விவரங்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் கமிஷனருக்கு அனுப்பி வைத்து உரிய ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்குமாறு கோரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்