தமிழக செய்திகள்

குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதை சி.சி.டி.வி. காட்சிகள் உறுதிசெய்கின்றன. கொலையாளிகளை இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் என முதல்அமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?

இரு அப்பாவிகளின் உயிரை பறித்த குற்றவாளிகளை பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதல்-அமைச்சர் செயலற்று இருப்பது ஏன்? முதல்-அமைச்சரின் பலவீனம் அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை