தமிழக செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன? -சென்னை ஐகோர்ட்டு கேள்வி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தினத்தந்தி

சென்னை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில், தங்களை ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கக்கோரி தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன் ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருந்தாலும் அதனை செலுத்தத் தயார் எனவும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், அதுதொடர்பாக மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்