சென்னை,
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மத்திய கல்வித்துறை அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் அந்த எழுத்துப்பூர்வமான கேள்வியில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 ஆண்டுகளில் செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?. 5 ஆண்டுகளில் இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? வழங்கப்பட்ட மானியங்கள், பிற மொழிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.