தமிழக செய்திகள்

நிர்மலா சீதாராமன் - எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? - வைகைச்செல்வன் விளக்கம்

நிர்மலா சீதாராமன் - எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பின் பின்னணி குறித்து வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று சந்தித்து பேசினார். பாஜக- அதிமுக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா கூறியிருந்தார். பின்னர் இதே கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதிபலித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரான எஸ்.பி வேலுமணி, நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் - எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பின் பின்னணி என்ன குறித்து வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"நிர்மலா சீதாராமன்-எஸ்.பி.வேலுமணி சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலம் தான் இருக்கிறது, அதற்குள்ளாக பல்வேறு வியூகங்களை அமைக்க வேண்டும், அதிமுக எப்படி எல்லாம் அடுத்த கட்ட கூட்டணி குறித்தான நகர்வதற்கு பல்வேறு பணிகளுக்கிடையே மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருக்கலாம் என்ற கருத்துக்கள் தான கிடைத்திருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது." என வைகைசெல்வன் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு