தமிழக செய்திகள்

சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்

சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

MeToo என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள், பிரபலங்கள் என பலதரப்பினர் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இது கடும் புயலை வீசி வருகிறது.

இதுபோல் சின்மயியும் வைரமுத்து மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த வைரமுத்து உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று டுவிட்டரில் பதிலளித்திருந்தார்.

எனினும் அவர் மறுப்பு தெரிவிக்கவே இல்லை. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து வைரமுத்து இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் என் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் பொய்யானவை. வழக்கு பதிவு செய்தால் அதை சந்திக்க தயாராக உள்ளேன். மூத்த வழக்கறிஞர்களுடன் ஒரு வாரமாக ஆலோசித்து வந்தேன் என்று வீடியோவில் வைரமுத்து கூறியுள்ளார்.

இந்தநிலையில், இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சந்தி சிரித்த பின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்,

கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய தமிழிசை, ஆண்டாளை பழித்த கவிஞர் வைரமுத்துவின் முகத்திரையை சின்மயி மூலம் ஆண்டாளே கிழிக்கிறார். சின்மயி மூலம் முகத்திரையை கிழிக்கிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு