தமிழக செய்திகள்

234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இந்திய தேர்தல் ஆணையம் வெளியீடு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

தினத்தந்தி

அதிகபட்சமாக, பாலக்கோடு தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 36 ஆயிரத்து 843 வாக்காளர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 922 பேர் (87.37 சதவீதம்) வாக்களித்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 214 பேர் ஆண்கள், 1 லட்சத்து ஆயிரத்து 708 பேர் பெண்கள்.

குறைந்தபட்சமாக, சோழிங்கநல்லூரில் மொத்தமுள்ள 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 வாக்காளர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 948 பேர் (55.51 சதவீதம்) வாக்களித்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் ஆண்கள், 1 லட்சத்து 91 ஆயிரத்து 384 பேர் பெண்கள். 19 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி பேர் (72.81 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?