தமிழக செய்திகள்

அடுத்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? - மருத்துவ நிபுணர் குழுவுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் அடுத்ததாக பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம்? என்பது பற்றி மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு 28-ந் தேதி முடிகிறது.

இந்த நிலையில் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு