தமிழக செய்திகள்

ஆதங்கம் என்ன என்பதை இரண்டு நாட்களில் சொல்கிறேன் - மு.க.அழகிரி

கோபாலபுரத்தில் மு.க.அழகிரி பேட்டி அளிக்கும் போது கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என்பதை இரண்டு, மூன்று நாட்களில் சொல்கிறேன் என கூறினார். #MKazakiri #Karunanidhi

தினத்தந்தி

சென்னை

தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் மறைந்ததைடுத்து கட்சியின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. குறிப்பாக கட்சியின் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதேசமயம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவர் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, திமுக செயற்குழு கூட்டம் மற்றும் அவரது பணிகள் குறித்து பேசினார். அப்போது கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் தன் பக்கம் இருந்து தன்னை ஆதரித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.மேலும் என்னுடைய ஆதங்கம் எல்லாம் கட்சி தொடர்பானது, குடும்பம் தொடர்பானது அல்ல என கூறினார்

பின்னர் அவர் கோபாலபுரம் சென்றார் அங்கு மு.க.அழகிரி பேட்டி அளிக்கும் போது கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என்பதை இரண்டு, மூன்று நாட்களில் சொல்கிறேன் என கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்