சென்னை,
தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி விஜய் பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் இலாகாக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதன் பின்னர் நேற்று முன்தினம் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, புதிதாக 23 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். நேற்று அமைச்சரவை 2-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டு 2 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடந்ததால் முதல்-அமைச்சர் விஜய்யால் பயணங்கள் எதையும் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் அமைச்சரவை தற்போது முழுமைய டைந்துவிட்டது. எனவே பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்காக பிரதமர் மோடியிடம் நேரம் ஒதுக்க கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு நேரம் ஒதுக்கப்பட்டதும், முதல்-அமைச்சர் விஜய் டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது.