தமிழக செய்திகள்

தமிழகத்திற்கு முக்கியமானவர்கள் வரும்போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுகிறது -தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு முக்கியமானவர்கள் வரும்போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுகிறது: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூரில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. சிறப்புறையாற்றினார்.

விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசிக் கொண்டு இருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அவர் பேசுவதை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெலுங்கானாவில் முதல்-அமைச்சர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் மக்களுக்காக நான் பணியாற்றுவேன். தமிழ்நாடு, மின்மிகை மாநிலம் என கூறிவரும் நிலையில், தமிழகத்திற்கு முக்கியமானவர்கள் வரும்போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுகிறது. திருவாரூரிலேயே தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. மின்சாரத்துறை அமைச்சருக்கு பிரச்சினை என்பதால் புதிய அமைச்சர் வந்ததன் காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறதா என தெரியவில்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது