சென்னை,
சென்னை மெரீனாவில் அமைந்துள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மதுரையை சேர்ந்த ஆயுதப்படை போலீசார் அருண்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இவ்விவகாரம் பற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த மெரீனா பகுதிக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை போலீசாரின் உடலில் இருந்து வெளியேறிய தோட்டா காணவில்லை என கூறப்படுகிறது. காணாமல் போன தோட்டா எங்கே என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.