தமிழக செய்திகள்

சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (09.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

தினத்தந்தி

சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் விபரம்;

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (09.10.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் ரெட்டேரி, ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள உமாயா மஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-37ல் வியாசர்பாடி, எம்.கே.பி நகர் 3வது பிரதான சாலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-86ல் அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனியில் உள்ள ஶ்ரீ வாரு பார்த்தசாரதி பேலஸ், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் கீழ்பாக்கம், விளையாட்டு திடல் தெருவில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-123ல் கே.பி.தாசன் தெருவில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி. திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்10) வார்டு-131ல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாய கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-167ல் நங்கநல்லூர், 100 அடி சாலையில் உள்ள ஸ்கேட்டிங் மையம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-179ல் பெசன்ட் நகர், மீன் சந்தை அருகில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-188ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து