தமிழக செய்திகள்

தூங்கி கொண்டிருந்தபோதுதனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட முயற்சி:வாலிபருக்கு வலைவீச்சு

தேவதானப்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வனிதா. நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. இதையடுத்து திடுக்கிட்டு எழுந்த பாண்டியராஜன் சென்று பார்த்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் வீட்டின் மாடி வழியாக இறங்கி பீரோவை திறந்து திருட முயன்றார். இதையடுத்து அவர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து பாண்டியராஜன் ஜெயமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் திருட முயன்றது அதே ஊரை சேர்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்