தமிழக செய்திகள்

திராவிட மாடல் திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கு உண்டு? - மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் திட்டங்கள் உள்ளவரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திராவிட மாடல் திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கு உண்டு?

உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திராவிட மாடல் திட்டங்கள் உள்ளவரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்!

களத்தில் நமது சாதனைகளைப் பெருமையோடும் - வாக்குறுதிகளை நம்பிக்கையோடும் மக்களே சொல்கிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தரமின்றி அவதூறுகளை அள்ளித்தெளிக்கிறார்கள்.

Wait and See… JudgmentDay-வில் அரசியல் அழுக்குகள் துடைத்தெறியப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.